Wednesday, October 12, 2011

deepavali santhosam

என்ன இருந்தாலும் அப்பா காசுல தீபாவளி கொண்டாடின  சந்தோசம் எதிலையும் வராது தெரியுமா ?
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
அவர் காசில் ஊசி பட்டாசு வாங்கி போட்ட சந்தோசம்
வெடி கடையில் வெடியை  ஆட்டையை போட்டது
முந்தின நாள்  இரவில் விடிய விடிய ஊர் சுற்றியது  
வெடி குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து நம் வீட்டு வாசலில் போட்டு நாம்தான்
நிறைய வெடி போட்டதாக பந்தா காட்டியது

வெடிக்காத வெடிகளை கலெக்ட்  செய்து மொத்தமாக கொளுத்தி போட்டு அதில் வரும் சிறு சிறு புஷ் மத்தாப்பு மற்றும் திடிர் என்று வெடிக்கும் சிறு சத்தம் ஒரு சந்தோசம்
நமக்கு பிடிக்காதவன் வீட்டு வாசலில் வெங்காய வெடி போட்டது
ஒருவனையும்   நிம்மதியா தூங்கவிடாமல் பண்ணியது
இதுதான்  நிஜ தீபாவளி தெரியுமா
 என்ன இருந்தாலும் எங்க மதுரைக்காரங்கே தீபாவளி மாதிரி வருமா
மேலே சொன்ன சந்தோசம் எல்லாம் பொண்டாட்டிக்கு சேலை வாங்கி கொடுத்தால் வந்து விடுமா?  சிந்த்யுங்கள் தோழர்களே தோழியர்களே